லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி
லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்கில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு கலிபோர்னியாவில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இக்கவுண்டியின் தலைமையிடம் லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரம் ஆகும். இக்கவுண்டி 17 மாவட்டங்களைக் கொண்டது. சூலை 2024 கணக்கெடுப்பின்படி 38,20,914 குடியிருப்புகள் கொண்ட இக்கவுண்டியின் மக்கள் தொகை 97, 57,179 ஆகும். லாஸ் ஏஞ்சலீசில் உள்ள ஹாலிவுட் நிறுவனம் திரைப்படம் தயாரிப்பதில் உலகில் முன்னணி வகிக்கிறது. மேலும் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் உள்ள டிஸ்னிலாண்ட் மிகச் சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் கொண்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் புகழ்பெற்றது.
Read article